சத்தான காலை டிபன் ஓட்ஸ் கார புட்டு

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து கார புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் ஓட்ஸ் கார புட்டு
Published on

ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
தக்காளி - 1
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
சூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க :

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

* இட்லி பாத்திர தட்டில் ஓட்ஸை போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாயை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சத்தான சுவையாக ஓட்ஸ் கார புட்டு ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com