

ஓட்ஸ் - 2 கப்
பச்சைப்பட்டாணி - 1/2 கைப்பிடி
கேரட் - சிறியது ஒன்று
சின்ன வெங்காயம் - ஐந்தாறு
தக்காளி - பாதி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - சிறிது
தாளிக்க :
எண்ணெய்,
கிராம்பு - 3,
பிரிஞ்சி இலை - 1,
சீரகம், கடலைப்பருப்பு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை :
* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
* பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை தட்டிக்கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் போட்டு தாளித்து விட்டு, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் பாதியளவு வெந்தவுடன் ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
* கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேசாக தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிளறி விடவும்.
* முழுவதையும் கொட்டி கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.
* தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.