கொள்ளு - கருப்பு உளுந்து வடை

மாலையில் சூடாக சாப்பிட கொள்ளு - கருப்பு உளுந்து வடை சூப்பராக இருக்கும். இன்று வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Published on

தேவையான பொருட்கள் : 

முளை விட்ட கொள்ளு - 200 கிராம், 

கருப்பு உளுந்து - 50 கிராம், 

பச்சரிசி - ஒரு டீஸ்பூன், 

புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, 

பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), 

நறுக்கிய சின்ன வெங்காயம்  - கால் கப், 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 

உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : 

புதினா, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கருப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். 

முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கருப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

சூப்பரான கொள்ளு - கருப்பு உளுந்து வடை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com