சமைப்போம்.... ருசிப்போம்...: கோதுமை ரவை வெஜ் பணியாரம்

அரைத்த மாவுடன் நறுக்கிய கேரட் மற்றும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் பல், கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து தோசை மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.
கோதுமை ரவை வெஜ் பணியாரம்
Published on

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

அரிசி மாவு - 1½ கப்

கடலை மாவு - ½கப்

இஞ்சி- பொடியாக நறுக்கியது

கேரட் மற்றும் வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

தேங்காய் பல் -(பொடிப் பொடியாக)

கறிவேப்பிலை, கொத்தமல்லி (நறுக்கியது)

செய்முறை:

கோதுமை ரவையை சுத்தம் செய்து பின் இருபது நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய கோதுமை ரவை, அரிசி மாவு மற்றும் கடலை மாவை மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுடன் நறுக்கிய கேரட் மற்றும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் பல், கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து தோசை மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிதளவு எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக ஊற்றி ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுத்தால் கோதுமை ரவை வெஜ் பணியாரம் ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com