குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள்

மழை மற்றும் குளிர் காலங்களில் முடியை பராமரிப்பது பெரும் பிரச்சனை. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும்.
குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள்
Published on

வெயில் காலத்தில் உடல் நன்றாக வியர்க்கும். கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதால், வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் நச்சுக்கள் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது.

சிறுநீரும் அந்த அளவுக்கு வெளியேறாது. இதனால் நச்சுக்கள் உடலில் தங்கி, தலைமுடியின் வேர் பகுதி பாதிக்கப்படும். இதுதான் தலைமுடி உதிரும். மழை மற்றும் குளிர்காலங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் விளக்கெண்ணெய்த் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் குளிப்பது நல்லது.

வறட்சியைப் போக்க தேங்காய்ப்பால், விளக்கெண்ணெயை சம அளவில் கலந்து அதனுடன் ஐந்த முதல் 10 சொட்டு டீட்ரீ எண்ணெயையும் (கடையில் கிடைக்கும்) கலந்து ஒரு பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தடவித் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, ஷாம்பு போட்டு முடியை நன்றாக அலச வேண்டும். தினமும் இரவு படுக்கும் முன், மரத்தினால் ஆன ஒரு பெரிய பல்l சீப்பினால் பத்து நிமிடம் நன்றாக மண்டையில் பதியும்படி முடியை வாரிவிட வேண்டும்.

இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகும். தலைமுடி உதிர்வதும் குறைவும். இரவில் 10, 15 உலர் திராட்சைகளை அரை டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீரையும் குடிக்கவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com