வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டுமா…?

குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு வரும் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் உடனடியாக தீர்வு காணலாம்.
வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டுமா…?
Published on

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 200 மிலி.
பனைவெல்லம் பொடித்தது - 2 டீஸ்பூன்.
சுக்கு பொடித்தது - 1 டீஸ்பூன்
டீத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு பொடித்தது - 10 மிளகு
சித்தரத்தை பொடித்தது - 1 டீஸ்பூன்.

செய்முறை

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மேற்கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து 5 நிமிடம் நன்றாக சாறு இறங்க கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக வடிகட்டி பால் சேர்க்காமல் காலையில் எழுந்தவுடன் கொடுங்கள். இரவு தூங்குவதற்கு முன்னரும் கொடுங்கள். மிதமான சூட்டில் கொடுத்தால் அவர்கள் பருக ஏதுவாக இருக்கும்.

எந்தக்காரணம் கொண்டும் சர்க்கரை சேர்க்க வேண்டும். இருமல் அதிகரிக்க காரணம் இனிப்புகள் தான். பனைவெல்லம் நல்லது தான் செய்யும். சுக்குக்கு பதிலாக இஞ்சி விழுதாக அரைத்து சேர்க்கலாம். மிளகு அதிகமாக்கினால் காரம் அதிகமாகி விக்கலை கொடுக்கும். இதனால் அருகில் சுடு தண்ணீர் வைத்துவிடுவது மிக நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com