சத்தான சுவையான அவல் சாம்பார் சாதம்

சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவலை வைத்து சத்தான சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான சுவையான அவல் சாம்பார் சாதம்
Published on

சிவப்பு அவல் - ஒரு கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
நறுக்கிய  பூசணிக்காய் - அரை கப்,  
கேரட் - ஒன்று,  
பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகு - கால் டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும்.

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும்.

பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (வெங்காயம் தவிர).

காய்கறிகள், பருப்பு வெந்தவுடன் அதில் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்...

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குடமிளகாயை போட்டு வதக்கி வதக்கி, அவலை பிழிந்து சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான அவல் சாம்பார் சாதம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com