சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா

புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா
Published on

தேவையான பொருட்கள் :

பெரிய நண்டு - அரை கிலோ

தக்காளி - 4

வெங்காயம் - 2

கிராம்பு - 4

[பாட்டி மசாலா] தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - ஒரு மூடி

பச்சை மிளகாய் - 4

[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

ஏலக்காய் - 4

பட்டை - 2

கொத்தமல்லி - சிறிதளவு,

[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை : 

நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். 

இரண்டு தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் கசகசாவை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நண்டில் அரைத்த தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்து பிசறி 30 மணி நேரம் ஊறவிடவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து அதில் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் சேர்த்து வதஙகியதும் [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்து இலேசாக வதக்கி அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். 

அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 

மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்த நண்டைச் சேர்த்து மூடி போட்டு சிவக்க வேக விடவும். 

நண்டு நன்றாக வெந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com