மது, புகை பழக்கத்தை நிறுத்தினால் இதயநோயை தடுக்கலாம்

மது, புகைப்பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும். இவை இரண்டையும் தவிர்த்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.
மது, புகை பழக்கத்தை நிறுத்தினால் இதயநோயை தடுக்கலாம்
Published on

இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர், அதனை முற்றிலும் விட்டுவிடுவது இதயத்திற்கு நன்மை தரும். புகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com