அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா?

அசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா?
Published on

உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும். நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும். ரத்த வாந்தி, தொடர் இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.

நெஞ்செரிச்சல்தானே.......தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்சனை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். காரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம்.

உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை. முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com