உதயநிதி படத்திற்கு தலைப்பு வைத்தது யார்?: ப்ரியதர்ஷன் விளக்கம்

உதயநிதி நடிப்பில் உருவாகி வரும், ‘நிமிர்’ படத்திற்கு யார் தலைப்பு வைத்தார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.
உதயநிதி படத்திற்கு தலைப்பு வைத்தது யார்?: ப்ரியதர்ஷன் விளக்கம்
Published on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நிமிர்’. இதில் கதாநாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தி உருவாகியுள்ள இப்படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்து வருகிறார்.

'நிமிர்' என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில், ''எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு. 

இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார் தான் 'நிமிர்' என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். 'நிமிர்' மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com