

காவிரி நதிநீர் பிரச்சினையில் ரஜினி-கமல் குரல் கொடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.
திண்டுக்கல்லில் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதி நீர் பிரச்சினையில் நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏன்? என அவர்களை கேள்வி கேட்க முடியாது. மேலும் காவிரி நதி நீர் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
அரசு பல்வேறு துறைகளுக்கு சலுகைகள் அளித்து வருகிறது. ஆனால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு பல புதிய கட்சிகள் களமிறங்கலாம். உள்ளாட்சி தேர்தல் வரும் போது எல்லா வகையிலும் எனது அறிவிப்புகள் வெளிவரும். இந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றங்கள் இருக்கும். ரஜினி மற்றும் கமலின் அரசியல் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்.
கடந்த சில காலங்களாக தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்தவரை மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக செயல்பட்டால் சந்தோஷமான வாக்காளராக நானும் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.