நானும் அரசியலில் ஈடுபடப் போகிறேன், அடுத்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் - விஷால்

ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றார்.
நானும் அரசியலில் ஈடுபடப் போகிறேன், அடுத்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் - விஷால்
Published on

ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால். விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், தான் விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் நான் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திரும்பிய போது, எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அந்த நிமிடமே நான் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனது இந்த முடிவுக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், மக்களில் ஒருவனாக இதை கூறுகிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர். இதனை என்னால் உணர முடிகிறது. 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் சக்திவாய்ந்த தலைவராக யார் வருவார்கள் என கேட்டதற்கு, இருவருமே அவர்களது கொள்கைகளை தெரிவிக்கவில்லை. எனவே அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றார். 

இடதுசாரிகளுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தால் அது சரியான முடிவாக இருக்குமா என்று கேட்டதற்கு, அதனை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ரஜினியிடம் இருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன், அவரது அடுத்தடுத்த முடிவுகள் என்ன என்பதை அறிய நானும் ஆவலாகவே இருக்கிறேன் என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com