விஜய் சேதுபதி பயங்கரமான ஆளு - தமன்னா

கண்ணே கலைமானே படம் ரிலீசாகி இருக்கும் நிலையில், தமன்னா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி பற்றி அவர் கூறும் போது, அவர் பயங்கரமான ஆளு, இயற்கையான நடிகர் என்றார். #KanneKalaimaane #Tamannaah
விஜய் சேதுபதி பயங்கரமான ஆளு - தமன்னா
Published on

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கெண்டிருக்கிறது. இந்த நிலையில், மாலைமலர் இணையதளத்திற்கு தமன்னா அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது,

சீனு ராமசாமி பற்றி?

சீனு ராமசாமி சார் ஒரு தேசியவாதி. வேறு நாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பெண்ணியத்தை மதிப்பவர். அவருடைய படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தமிழ் பையன தான் கல்யாணம் பண்ணவேன்ணு சொன்னீர்களே?

நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழி, சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இருக்க வேண்டும்.

உடன் நடித்த நடிகர்கள் பற்றி கேட்ட போது அவர் கூறிய பதில்களாவன, 

விஜய் சேதுபதி - இயற்கையான நடிகர். அவர் மட்டும் எப்படி இயற்கையாக இருக்கலாம். அவருடன் நடிக்க பயமாக இருக்கும். எனக்கு பிடித்த நடிகர்களுள் அவரும் ஒருவர். அவர் நடிப்பதே தெரியாது, அந்த அளவுக்கு சிறந்த நடிகர். மணிரத்னம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். பயங்கரமான நடிகர்.

கார்த்தி - கார்த்தியுடன் 3 படம் நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புபவர். 

விஜய் - ரொம்ப அமைதியாக இருப்பார். 

அஜித் - குடும்ப மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு சமைத்து கொடுப்பார். 

பிரபாஸ் - பாகுபலி, உண்மையான பாகுபலி. இரக்க குணமுடையவர். பலமானவர். 

இவ்வாறு கூறினார். #KanneKalaimaane #Tamannaah #UdhayanidhiStalin #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com