மகனை நினைத்து வருத்தப்படும் விஜய்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய மகன் சஞ்சய்யை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் மகன் சஞ்சய்
நடிகர் விஜய் மற்றும் மகன் சஞ்சய்
Published on

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கன்னடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com