அதிக எடைகொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு ஊரை சுற்றிவந்த உதயநிதி

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்காக உதயநிதி அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு நடித்துள்ளார்.
அதிக எடைகொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு ஊரை சுற்றிவந்த உதயநிதி
Published on

இப்படத்தில் உதயநிதி முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை உதயநிதி தலையில் சுமந்துகொண்டு, காலில் செருப்பு அணியாமல் கிராமத்தை சுற்றி வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா, சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் இந்த காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com