‘மெர்சல்’ படப்பிடிப்பால் கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்து பாதிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நடைபெற்றதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
‘மெர்சல்’ படப்பிடிப்பால் கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்து பாதிப்பு
Published on

நடிகர் விஜய் நடித்து வரும் படம் “மெர்சல்”. இயக்குனர் அட்லி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு கிண்டி கத்திபாரா பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டில் நடந்தது. சாலையில் தடுப்பு போட்டு போக்குவரத்தை தடை செய்து இருந்தனர். படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டதாக தெரிகிறது.

படப்பிடிப்புக்கு நள்ளிரவு முதல் இன்று காலை 6 மணி வரை போலீசார் அனுமதி கொடுத்து இருந்தனர். ஆனால் 8 மணி வரை படப்பிடிப்பு நடந்தது.

இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாததால் மாற்று பாதையில் சென்றன.

இதையடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே வாகன ஓட்டிகள் படப்பிடிப்பு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர். படப்பிடிப்புக்கு அளித்த நேரத்தை விட கூடுதலாக எடுத்துக் கொண்டதை குறித்து விசாரணை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com