

இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப்படத்தில் காட்டப்படவில்லை.
இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக `தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.