ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: கார்த்தி அறிவிப்பு

நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய பொருளாளர் கார்த்தி, ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: கார்த்தி அறிவிப்பு
Published on

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என்றார். உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 60 வயதுக்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய முடியவில்லை. ஜி.எஸ்.டியால் நடிகர் சங்க கட்டடம் கட்ட மதிப்பீடு செய்த தொகையைவிட கூடுதல் செலவாகி வருகிறது.’ என்றார்.

கடந்த வருடம் இதுபோல், சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யா, கார்த்தி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com