சிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி: மகன் ராம்குமார் பேட்டி

சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து, சிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி தான் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
சிவாஜி சிலையை எங்கு வைத்தாலும் மகிழ்ச்சி: மகன் ராம்குமார் பேட்டி
Published on

சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிலையின் அருகில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிவாஜி சிலைக்கு அவரது மகன் ராம்குமார், பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதில் யசோதா, முன்னாள் எம்.பி. விசுவநாதன், சிவராஜ் சேகர், வீரபாண்டியன், அசன் ஆரூண், சந்திரசேகர், வேலுதேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

நடிகர் சங்கம் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்.வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.சத்யா, விக்னேஷ், எம்.ஏ.பிரகாஷ், காஜா மொய்தீன், பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக சிவாஜி கணேசன் வீட்டிலும் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் ஏராளமானோர் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ராம்குமாரிடம் சிவாஜி கணேசன் சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராம்குமார் அளித்த பதில் வருமாறு:-

நடிகர் திலகம் சிவாஜி சிலையை எங்கு அமைத்தாலும் சந்தோ‌ஷம்தான். அவர் மக்கள் மனதில் நிறைந்து இருக்கிறார். சிவாஜி மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

அரசும், அதிகாரிகளும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக் கிறார்கள். இன்று அவரது 16-வது ஆண்டு நினைவு நாள்.

எல்லோர் மனதிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அவரது சிலையை கடற்கரையில் அமைத்தாலும் மகிழ்ச்சி. மணி மண்டபத்தில் அமைத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com