மீண்டும் இணைந்த சிம்பு - கவுதம் மேனன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிம்பு இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் மூலம் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
மீண்டும் இணைந்த சிம்பு - கவுதம் மேனன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சமீபத்தில் இதுகுறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முதலில் "கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்' படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேபோல் `பில்லா' படத்தின் மூன்றாவது பாகத்தை சிம்பு இயக்கி, நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த படம் குறித்த வெளியான சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவ்வப்போது சிம்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருந்ததாவது,

தான் இயக்கவிருக்கும் புதிய படம் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகிறது என்றும், தமிழ் மற்றும் சில முக்கிய மொழிகளில் அந்த படம் டப் செய்யப்பட உள்ளதாகவும் சிம்பு கூறியிருக்கிறார். மேலும் படத்தின் திரைக்கதையை தீவிரமாக எழுதி வருவதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு வசனங்களை எழுதுவதின் மூலம் இயக்குநர் கவுதம் மேனன் உடன் சிம்பு மீண்டும் இணைந்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com