ரஜினி படத்தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் அடுத்ததாக ரஜினியின் படத்தலைப்பில் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.
ரஜினி படத்தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்
Published on

2011-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பிரசாந்த், நடிப்பில் `புலன் விசாரணை' என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் `சாகசம்' என்ற படமும் வெளியானது.

இந்நிலையில், பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `ஜானி காடர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் அந்த படத்திற்கு `ஜானி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகேந்திரன் இயக்கத்தில் ஜானி என்ற படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் ஜோடியாக இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும்நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வெற்றி செல்வம் இயக்கவிருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை  எம்.வி.பன்னீர்செல்வம் மேற்கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com