விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் பிரபல நிறுவனம்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து அருண் குமார், விஜய் சேதுபதி மூன்றாவது இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #VijaySethupathi
விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் பிரபல நிறுவனம்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் சேதுபதி தற்போது, 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், விஜய் சேதுபதியை அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை பாகுபலி-2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கே புரொடக்‌ஷன்ஸ் - யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மற்றும் தென் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com