நாள், நேரம், இடம் குறித்து விட்டு வா, உன்னை சந்திக்க நாங்கள் தயார் - உதயநிதி காட்டம்

பெரியார் சிலை உடைப்பு குறித்து, நாள், நேரம், இடம் குறித்து விட்டு வா, உன்னை சந்திக்க நாங்கள் தயார் என்று உதயநிதி நறுக்கென்று டுவிட் செய்திருக்கிறார். #PeriyarStatue #Udhayanidhi
நாள், நேரம், இடம் குறித்து விட்டு வா, உன்னை சந்திக்க நாங்கள் தயார் - உதயநிதி காட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிராமத்தில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

துண்டிக்கப்பட்ட தலை பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர்.

மேலும் அங்கு பதட்டத்தை தவிர்க்கும் வகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை விரைவாக ஒட்டவைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள், நேரம், இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! #PeriyarStatue #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com