உயிர் முதல் லெனின் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்கள்
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

உயிர்

சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் படம் ‘உயிர்’. கண்ணூர் பகுதியில் பயிற்சி பெறும் ஒரு இளம் போலீஸ் அதிகாரி, அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்துகிறார். அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் குற்றங்களையும் அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.

இதயம் முரளி

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவான திரைப்படம் "இதயம் முரளி". தமிழ் திரையுலகில் மறைந்த முன்னணி நடிகர் முரளியின் எவர்கிரீன் கதாபாத்திரமான 'இதயம் முரளி' என்ற பெயரிலேயே இப்படம் உருவானதால், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவரும் வகையிலான பக்கா ரொமாண்டிக் திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘இதயம் முரளி’, கடந்த மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 7-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் வசதிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

வதந்தி சீசன் 2

'வதந்தி சீசன் 2 - தி மிஸ்டரி ஆஃப் மணி' வருகிற 7-ந்தேதி முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.இ ந்த க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார்.

நூறு சாமி

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘நூறு சாமி’. கணவனை இழந்த ஒற்றைத் தாய் தன் மறுமண விருப்பத்தை வெளிப்படுத்துவதும், அதனை சமூகமும், மகன்களும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதுமான உணர்வுப்பூர்வமான கதை. இப்படம் ஜூன் மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், வருகிற 7-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நூறு சாமி படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.

லெனின்

முரளி கிஷோர் அப்புரு இயக்கத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான படம் ‘லெனின்’. இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், வருகிற 7-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com