Elite Force முதல் கான் சிட்டி வரை... இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
ஓடிடி தளங்கள்
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

Elite Force

'Elite Force' என்பது 8 அத்தியாயங்களைக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகவிருக்கும் ஒரு பிரெஞ்சு திரில்லர் தொடராகும். நாளை முதல் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

My Daughter's Father

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு சிறுநீரக தானம் செய்பவரைத் தீவிரமாகத் தேடும் ஒரு மருத்துவரின் கதையை விவரிக்கும் தொடர் 'My Daughter's Father'. இத்தொடரை நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.

கான் சிட்டி

அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கான் சிட்டி'. இத்திரைப்படம் ‘ஏமாற்றாதே... ஏமாறாதே!’ என்ற சுவாரசியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பண ஏமாற்று வேலைகள் மற்றும் கிரைம் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் மற்றும் காமெடி பாணியில் இயக்குனர் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 26-ந்தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'கான் சிட்டி' திரைப்படம், வரும் 24-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஈகோ ராமன்

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் முதன்முறையாக வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரத்தை விடுத்து, முழுமையான வில்லன் மற்றும் அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் 'ஈகோ ராமன்'. இப்படம் கடந்த மே மாதம் வெளியான நிலையில் வருகிற 24-ந்தேதி ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது

72 Hours

கெவின் ஹார்ட் கதாநாயகனாக நடித்துள்ள 72 Hours நகைச்சுவைப் படம், தற்செயலாக ஒரு பேச்சுலர் பார்ட்டி பற்றிய குழு அரட்டையில் சேர்க்கப்படும் 40 வயது விளம்பர நிர்வாகி ஒருவரின் கதையை கொண்டது. இப்படம் வரும் 24-ந்தேதி முதல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com