சி.எஸ்.டி. பிரச்சினையால் தள்ளிப்போன நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் சி.எஸ்.டி பிரச்சினையால் தள்ளிப்போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சி.எஸ்.டி. பிரச்சினையால் தள்ளிப்போன நெஞ்சம் மறப்பதில்லை
Published on

இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்திற்கான புரோமோஷன்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, பலமுறை இப்படம் வெளியாகும் என தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொரு காரணங்களுக்காக வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு படக்குழு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வரும் ஜுலை மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கும் சி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கூடுதல் வரிகள் உள்ளிட்டவற்றை பற்றி சரியான தெளிவு இல்லாததால், அதைப்பற்றியான முழு விவரங்களும் அறிந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com