திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் செய்தி

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். #Kalaignar #Karunanidhi #Nayanthara
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் செய்தி
Published on

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

மேலும் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 

தற்போது நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிக சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம். 

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது! அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. 

அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என்  ஆழ்ந்த இரங்கலை

 தெரிவித்துக் கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com