அறம் படத்துக்கு நயன்தாரா உயிரூட்டி இருக்கிறார்- ஜிப்ரான்

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அறம்’ படத்திற்காக அவர் உயிரூட்டிருக்கிறார் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியிருக்கிறார்.
அறம் படத்துக்கு நயன்தாரா உயிரூட்டி இருக்கிறார்- ஜிப்ரான்
Published on
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘அறம்’. இந்த படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. ஜிப்ரான் இசை அமைக்கும் இந்த படத்தின் இசை சேர்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

‘அறம்’ படம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள ஜிப்ரான், ‘அறம்’ படத்தின் ஒலிக் கலவை பணிகளை முடித்தோம். அற்புதமான இந்த படத்தில் பங்காற்ற வைத்த இறைவனுக்கு நன்றி. இந்தியாவின் வளர்ச்சி அடையாத ஒரு பகுதியில் இருந்து வந்தவனாக, இந்த படத்துடன் என்னை நிறைய தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. மக்கள் கேட்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி இந்த படம் பேசுகிறது. இது திரைக்கு வந்ததும், அதன் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த படத்துக்கு நயன்தாரா உயிரூட்டியுள்ளார். அவருக்கும், இயக்குனர் கோபி, தயாரிப்பாளர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், படத் தொகுப்பாளர் ரூபன், சண்டை பயிற்சியாளர் பீட்டர் கெய்ன் ஆகியோருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com