‘மெர்சல்’ படத்திற்கு எதிரான தடைகள் முற்றிலுமாக நீக்கம்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
‘மெர்சல்’ படத்திற்கு எதிரான தடைகள் முற்றிலுமாக நீக்கம்
Published on

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்திற்கென வர்த்தக்குறி பெறப்பட்டது. இதனால் மெர்சல் என்ற பெயரை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து ‘மெர்சல்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கடந்த 2014ம் ஆண்டு அவரது படத்திற்கு ‘மெர்சலாயிட்டேன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், ‘மெர்சல்’ படத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தககுறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளதால் `மெர்சலாயிட்டேன்' படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 6-ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com