`காலா'வில் மீண்டும் இணையும் `நெருப்புடா' கூட்டணி: தீயை பற்ற வைக்கும் நெருப்பு குமார்

`கபாலி' படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற `நெருப்புடா' பாடலுக்கு பிறகு `காலா' படத்திலும் அதே கூட்டணி மாஸான பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக அருண்ராஜா காமராஜ் கூறியிருக்கிறார்.
`காலா'வில் மீண்டும் இணையும் `நெருப்புடா' கூட்டணி: தீயை பற்ற வைக்கும் நெருப்பு குமார்
Published on

இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன்
நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலைப் போன்றே மாஸான ஒரு தீம் பாடல் இடம் பெறுவதாக அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தில் அருண்ராஜா காமராஜ் வரிகளில், அவரே பாடிய `நெருப்புடா நெருங்குடா பாப்போம்' பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், காலா படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com