படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரம் ஆனது மதுரவீரன்

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரம் ஆகியிருக்கிறது.
படப்பிடிப்பு முடியும் முன்பே வியாபாரம் ஆனது மதுரவீரன்
Published on

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து வியந்து போய் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார். இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த, ‘மதுரவீரன்’. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com