கமல்ஹாசன் திட்டத்தை தெளிவாக கூற வேண்டும்: நடிகை கஸ்தூரி

நடிகர் கமல்ஹாசன் தனது எதிர்கால திட்டத்தை தெளிவாக கூற வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் திட்டத்தை தெளிவாக கூற வேண்டும்: நடிகை கஸ்தூரி
Published on

அவருக்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

கமல் கூறுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய திட்டங்கள் இருக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு பெரிய திட்டங்கள் இருந்தால் அதை அவர் தெளிவாக கூற வேண்டும் என்று நான் நேரடியாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு பின்னால் 4 பேர் செல்கின்றனர். நம் நாட்டில் போலி சாமியாருக் குக்கூட வரவேற்பு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேருக்கு பின்னால் 4 பேர் செல்வதில் என்ன தவறு உள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான “ஸ்டிங்” ஆபரே‌ஷனை தொடர்ந்தும், குட்கா ஊழலைத் தொடர்ந்தும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தினமும் கேட்டுக் கொண்டு உள்ளன. இந்நிலையில் கமல் தனது டுவிட்டரில் ஏன் அப்படி கூறினார்?

இவ்வாறு கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com