கார்த்தியை சந்தோஷத்தில் ஆழ்த்திய தங்கை பிருந்தா

நடிகர் சிவகுமாரின் மகளான பிருந்தா, இன்று ஒரு பாடகியாக அறிமுகமானதற்கு நடிகர் கார்த்தி மிகவும் சந்தோஷப்பட்டிருக்கிறார். #Karthi #MRChandramouli
கார்த்தியை சந்தோஷத்தில் ஆழ்த்திய தங்கை பிருந்தா
Published on

நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இவர்களின் தங்கை பிருந்தாவும் தற்போது சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு, என் தங்கை பிருந்தா இப்படத்தில் பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். அதுபோல் நடிகர் சிவகுமார், ஒரு வாழ்த்து மடலை அனுப்பி வைத்திருந்தார்.

விழாவில் கலந்துக் கொள்ளாத கார்த்தி, தனது சமூக வலைத்தளத்தில், ‘நான் எப்போதும் என் தங்கை பிருந்தாவுடன் விளையாடிக்கொண்டே இருப்பேன். ஆனால், எனக்கு இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் தங்கை அதிகாரப்பூர்வமான பாடகியாக மாறியிருக்கிறார். இதற்கு காரணமான தயாரிப்பாளர் தனஞ்செயன், இசையமைப்பாளர் சாம், இயக்குனர் திரு ஆகியோருக்கு பெரிய நன்றிகள். மிஸ்டர் சந்திரமௌலி வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com