வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி படத்தை அடுத்து கார்த்தி நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய செய்திக்கு அவர் மறுத்துள்ளார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி
Published on

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இப்படத்தை அடுத்து ‘நீடி நாடி ஒகே கதா’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய ரவி உடுகுலாவின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தின் கதையை கார்த்தியிடம் சொல்லிவிட்டதாகவும், இதற்கு கார்த்தி ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

இதை கார்த்தி முற்றிலும் மறுத்துள்ளார். ரவு உடுகுலா இயக்கத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி. அப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவில்லை. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் 'கார்த்தி 17' என்ற அடுத்த படத்தில் முழுவீச்சில் நடிக்க இருக்கிறேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com