மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
Published on
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல், மாணவி அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். நீட்டுக்கு போராட வேண்டியவர்கள் அனைவரும் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் அனைவரும் சோர்வடைய கூடாது. இதுப்போன்ற துயரம் இனிமேலும் நிகழக்கூடாது. தமிழகத்தில் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். தமிழக அரசியல் நிலவரம் வேடிக்கையாக உள்ளது. நான் எந்த பக்கமும் சாயவில்லை. கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.

மாணவியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைதான் மாணவியின் உயிரைப் பறித்ததாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
X

Maalai Malar
www.maalaimalar.com