களத்தில் குதித்துவிட்டால் கமலே ‘பிக்பாஸ்’: நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கமலுக்கு எதிராக பேநிய அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி, களத்தில் குதித்துவிட்டால் கமலே ‘பிக்பாஸ்’ என்று கூறினார்.
களத்தில் குதித்துவிட்டால் கமலே ‘பிக்பாஸ்’:  நடிகர் தாடி பாலாஜி பேட்டி
Published on

தமிழக அரசு மீது ஊழல் புகார் கூறிய கமலுக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரை உலக பிரமுகர்களும் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியும் கமலை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

அரசியலில் பொது வாழ்வில் ஈடுபட கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பலர் கேட்கிறார்கள். இப்போது அமைச்சர்களாக இருந்து கொண்டு கமலை விமர்சிப்பவர்கள் பிறந்தவு டனேயே இந்த துறைக்கு இவர் அமைச்சராவார். அந்த துறைக்கு இவர் அமைச் சர் ஆவார் என்றா எழுதி வைக்கப்பட்டிருந்தது.

எல்லோரும் வளர்ந்து தங்களையும் வளர்த்துக் கொண்டு அமைச்சர்களாகி இருக்கிறார்கள். அந்த வகையில் கமலும் திரை உலகில் இந்த உயரத்தை தொடுவதற்கு கடுமையாக உழைத்துள்ளார். சிறந்த அறிவு ஜீவி அவர். அரசியலுக்கு வர இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்.

கமல் தனது அரசியல் பிரவேசம் பற்றி இறுதியான தகவல்களை இன்னும் கூறாமலேயே உள்ளார். ஆனால் அரசியல் களத்தில் இறங்கி விட்டால் அவரே பிக்பாஸ்.

ஒருவர் சந்தோ‌ஷத்தில் இருக்கும் போது அவருடன் இருப்பது பெரிதல்ல. துக்கத்தில் இருக்கும் போதும் உடன் இருக்க வேண்டும். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது இந்த அமைச்சர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நானும் சில பாதிப்புகளை சந்தித்துள்ளேன். சில நண்பர்களை தவிர யாரும் அந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. இதுதான் உலகம்.

இவ்வாறு நடிகர் தாடி பாலாஜி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com