‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம்?

ரஜினிகாந்த் ‘காலா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இமயமலைக்கு அவர் ஆன்மிக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம்?
Published on

ரோட்டோர கடைகளில் உணவு வாங்கி நின்று கொண்டே சாப்பிடுவது அவருக்கு பிடிக்கும். ஆசிரமங்களுக்கு நடந்தே சென்று அங்குள்ள சாமியார்களிடம் ஆசி பெறுவார். இமயமலை பயணத்தை முடித்து விட்டு புத்துணர்ச்சியோடு சென்னை திரும்புவார். அவருடன் நண்பர்கள் சிலரும் செல்வது உண்டு.

தற்போது ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். எனவே மீண்டும் இமயமலை செல்ல அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் இமயமலையில் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. அப்போது வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். பாபா குகையிலும் தியானம் செய்கிறார்.

இமயமலை பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய பிறகு அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் இரண்டு மாதங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ரசிகர்களிடமும் நாட்டில் அமைப்பு கெட்டு கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்று அறிவுறுத்தி அரசியலுக்கு வருவதை சூசகமாக தெரிவித்து உள்ளார்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள், மூத்த நடிகர்கள் உள்பட நெருக்கமானவர்களிடம் அரசியலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து கருத்து கேட்டு வருகிறார். பலரும் அரசியலில் ஈடுபடும்படியே அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தனி கட்சி தொடங்கினால் மக்களிடம் வரவேற்பு இருக்குமா? தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்றெல்லாம் கருத்து கணிப்புகள் நடத்துவதாகவும் கட்சி பெயர், கொடி, சின்னம் தயார் செய்யும் வேலைகள் ரகசியமாக நடப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com