பலூன் படத்தில் ஜெய் ஹீரோ இல்லை: இயக்குனர் சினிஷ்

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘பலூன்’ படத்தில் அவர் ஹீரோ இல்லை என்று படத்தின் இயக்குனர் சினிஷ் கூறியுள்ளார்.
பலூன் படத்தில் ஜெய் ஹீரோ இல்லை: இயக்குனர் சினிஷ்
Published on

சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகைகள் அஞ்சலி, ஜனனி ஐயர், இயக்குனர் சினிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால், இப்படத்தின் கதாநாயகன் ஜெய் கலந்துக் கொள்ள வில்லை. இதுகுறித்து சினிஷ் பேசும்போது, ‘நடிகர் ஜெய் புரமோஷனை விரும்பாதவர். எனக்கு புரமோஷன் வேண்டாம். படம் நன்றாக ஓடினால் போதும் என்று ஜெய் என்னிடம் கூறினார் என்றார். மேலும் இந்த படத்தில் ஜெய் ஹீரோ இல்லை. கதைதான் ஹீரோ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com