விஷால், கார்த்தி இணையும் `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டதா?

பிரபுதேவா இயக்கத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்ட `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
விஷால், கார்த்தி இணையும் `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டதா?
Published on

படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய தகவல் ஒன்று வந்துள்ளது. எனினும் இதுகுறித்த முழு தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

விஷால், கார்த்தியின் தேதிகள் கிடைப்பதிலும் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் விஷால் `சண்டக்கோழி 2'-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். எனவே இற்த படம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com