காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

காண்டிராக்டரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
Published on

கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட் டுள்ளதால் சந்தானம் கைது செய்யப்படுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சந்தானம் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அதில் என் மீது கொடுக்கப்பட்டுள்ளது பொய் புகார் என்றும், காண்டிராக்டர் சண்முகசுந்தரம் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு சொன்னபடி கட்டிடம் கட்டி தரவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்தான் என்னை முதலில் தாக்கினார்.

நான் கொடுத்த புகாரில் சண்முகசுந்தரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அவர் என் மீது புகார் கொடுத்துள்ளார்.

நான் சட்டத்தை மதித்து நடக்கக் கூடிய இந்தியக் குடிமகன். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

சந்தானம் மீது போடப்பட்டுள்ள வழக்கில் 506(2), ஐ.பி.சி. (கொலை மிரட்டல்) சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவாகும்.

சந்தானத்தின் முன் ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சந்தானத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் சந்தானத்தை கைது செய்யக்கூடிய சூழல் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com