சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் எஸ்.கே 15 படத்தில் அர்ஜுன், யுவன் ஷங்கர் ராஜா என இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய பலரும் இணைந்துள்ளனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி
Published on

`சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் இரும்புத்திரை கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.

`இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், இந்த படத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

X

Maalai Malar
www.maalaimalar.com