இப்படை வெல்லும்

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி, ஆகியோர் நடிப்பில் கௌரவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் விமர்சனம்...
இப்படை வெல்லும்
Published on

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், மஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார். இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது விடுகிறார்கள்.

இதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து, டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்தாரா? மஞ்சிமா மோகனுடன் இணைந்தாரா? டேனியல் பாலாஜியை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி வழக்கமான அவரது ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடி ஓடி நடித்திருகிறார். முதல்பாதி மஞ்சிமா மோகனுடன், இரண்டாம் பாதியில், சூரியுடனும் பயணித்து நடித்திருக்கிறார். மஞ்சிமாவுடன் ரொமன்ஸிலும், சூரியுடன் காமெடியிலும் கலக்கி இருக்கிறார் உதயநிதி.

மஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கு பயப்படுவது, துணிச்சலாக திருமணம் செய்து கொள்ள தயாராகுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

சூரியின் காமெடி இப்படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது. உதயநிதியுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்திருக்கிறது. உதயநிதிக்கு அம்மாவாகவும் பஸ் டிரைவராக நடித்திருக்கிறார் ராதிகா. பஸ் ஓட்டும் முதல் பெண்ணாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அதுபோல் தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியும் சிறப்பாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். இயக்குனர் கவுரவ் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருக்கிறார்.

தூங்கா நகரம், சிகரம் தொடு, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த, கவுரவ் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக திரைக்கதை சூடுபிடிக்கிறது. உதயநிதி, சூரி, டேனியல் பாலாஜி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com