மாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhaush #Maari2
மாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருக்கும் நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மாரி 2’ படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுகுறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது... மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஜாலியாக, விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. என்று கூறியுள்ளார். 

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் நடித்துள்ளனர்.  வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com