அரசியல் பிரச்சனைகளில் பிரபலங்கள் மவுனம் காப்பது ஏன்?

சமூகப் பிரச்சனைகள் வரும்போது எல்லாம் பிரபலங்கள் பலர் அமைதியை காப்பதையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
அரசியல் பிரச்சனைகளில் பிரபலங்கள் மவுனம் காப்பது ஏன்?
Published on

செல்வாக்குமிக்க அவர்கள் பொது மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பேசுவதால் தனிப்பட்ட தொழில்முறை மற்றும் உணர்ச்சி ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அமைதி

திரையுலக பிரபலங்கள் பலர் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் வரும்போது அமைதி காத்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் இந்தியாவையே உலுக்கியது.

இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட்டை சேர்ந்த பலர் ஆதரவாக குரல் எழுப்பிய நிலையில் முன்னணி இந்திய நடிகர்கள் மத்தியில் ஒரு மவுனம் நிலவி வருகிறது. இந்த அமைதி இப்போது மட்டுமல்ல. சமூகப் பிரச்சனைகள் வரும்போது எல்லாம் பிரபலங்கள் பலர் அமைதியை காப்பதையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதுகுறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில்,

செல்வாக்குமிக்க அவர்கள் பொது மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பேசுவதால் தனிப்பட்ட தொழில்முறை மற்றும் உணர்ச்சி ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே அவர்கள் மௌனம் காத்து வருகிறார்கள். இது மட்டுமின்றி விமர்சனங்கள் சமூக வலைதள துன்புறுத்தல் நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்பு பின் தொடர்பவர்களை இழப்பது வணிகத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் தவறாக புரிந்து கொள்ளப்படுதல் போன்றவற்றை நினைத்து அவர்களுக்கு வரும் பயமே இது போன்ற நிகழ்வுகளில் பேசாமல் கடந்து செல்கின்றனர்.

ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சில பிரச்சனைகளில் பிரபலங்கள் வெளியிடும் கருத்துக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். சமூகத்திலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com