முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய் ஆண்டனி

எப்போதும் போலவே, அவரது நேர்மறை சிந்தனையையும் ஆற்றலையும் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக அமைந்தது.
முதலமைச்சர் விஜயை சந்தித்த விஜய் ஆண்டனி
Published on

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைகப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது:-

நமது மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்து, அவருடன் மிகச் சிறந்த நேரத்தைச் செலவிட்டேன். எப்போதும் போலவே, அவரது நேர்மறை சிந்தனையையும் ஆற்றலையும் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக அமைந்தது.

அவருக்குத் தொடர்ந்து வலிமையும், ஞானமும், நல்ல உடல்நலமும் பெருகிட வாழ்த்துகிறேன். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதையும், சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டு வரவும், இப்பிரபஞ்சம் அவருக்கு அபரிமிதமான நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘வேலாயுதம்’ படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com