‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

படம் ஆக.21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் வெளியானது!
Published on

பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், புதிதாக இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பியார் பிரேமா கல்யாணம். இப்படத்தில் இயக்குநர் எலனுக்கு ஜோடியாக சான்வி மேகனா நடித்துள்ளார்.

இப்படத்தில் ராதிகா சரத்குமார் , யோகி பாபு , எம்.எஸ். பாஸ்கர் , கீதா கைலாசம் , இளங்கோ குமரவேல் , செந்தில் மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ஆக.21ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான மாப்பிள்ளை சிங்கம் இன்று வெளியாகி உள்ளது. முதல் பாடலான அட்ராசிட்டி சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று 2வது பாடல் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com