'தலைவர் 173'... டாக்டராக நடிக்கும் ரஜினி?

‘தலைவர் 173’ படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணி தற்போது பூந்தமல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'தலைவர் 173'... டாக்டராக நடிக்கும் ரஜினி?
Published on

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் ‘தலைவர் 173’ மூலம் மீண்டும் இணைகின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த சில தினங்களாக ‘தலைவர் 173’ படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, ‘தலைவர் 173’ படத்தில் பிரபல இயக்குநர் மிஸ்கின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சாண்டி மாஸ்டரின் நடன அசைவில் ரஜினிகாந்துக்காக ஒரு அதிரடியான பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணி தற்போது பூந்தமல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘தலைவர் 173’ படத்திற்கான போட்டோஷூட் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இப்படத்தில் அவர் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com