'தலைவர் 173' படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
'தலைவர் 173' படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
Published on

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டு பணிகள் மேற்கொண்டு நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் ‘தலைவர் 173’ மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு நாளை (இன்று) காலை 10 மணியளவில் வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் போஸ்டர் வெளியிட்டு நேற்று தெரிவித்து இருந்தது.

அதன்படி, இன்று ‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது. ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்திற்கு "தர்மன்" என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

X

Maalai Malar
www.maalaimalar.com