தூங்காமல் இருப்பதற்கு டியூன் போட்ட யுவன் சங்கர் ராஜா

செல்வின் ராஜ் சேவியர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.இப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தூங்காமல் இருப்பதற்கு டியூன் போட்ட யுவன் சங்கர் ராஜா
Published on

இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான (Nobody Sleeps Here) பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு முன்பு இப்படத்திலிருந்து வெளியான புரொமோவில் யுவன் சங்கர் ராஜாவிடம் நடிகர் சதீஷ் தூங்காமல் இருக்கா பாட்டு போட்டு தரும்படி கேட்டிருப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com